2020-21-ல் பாதுகாப்புத்துறையை நவீனமயமாக்க ரூ.90,048 கோடி ஒதுக்கீடு.!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டுத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டுத்தொடரில் பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, 2020-21 ஆம் ஆண்டில் பாதுகாப்பு சேவைகள் மதிப்பீட்டின் கீழ் ஆயுதப்படைகளை நவீனமயமாக்க ரூ .90,048 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி கடந்த ஆண்டு ஒதுக்கீட்டை விட ரூ .9,000 கோடிக்கு மேல் அதிகமாக உள்ளது. புதிய உபகரணங்கள் வாங்குதல் மற்றும் இருக்கும் உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை மேம்படுத்துதல் மூலம் நவீனமயமாக்கலுக்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை பாதுகாப்பு சேவைகள் மதிப்பீட்டில் 27.87 சதவீதம் ஆகும்.
இதை, நேற்று மத்திய பாதுகாப்பு மற்றும் ஆயுஷ்துறை இணை மந்திரி ஸ்ரீபாத் நாயக், மாநிலங்களவை எம்.பி.க்கள் பி பட்டாச்சார்யா மற்றும் விஜய் பால் சிங் தோமர் ஆகியோர் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டுத்தொடர் நேற்று தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி வரை விடுமுறை இல்லாமல் நடைப்பெறுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தினமும் நான்கு மணி நேரம் கூட்டுத்தொடர் நடைபெறுகிறது.