மணிப்பூர் கலவரம்.. அமித்ஷா தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, அதிமுக இன்னும் பலர்.!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக ஆலோசிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரம் ஏற்பட்டு 50 நாட்களை கடந்துவிட்டது சுமார் 90க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்துள்ளனர். பலர் இன்னும் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுளள்னர். இன்னும் அங்கு கலவரம் ஓய்ந்ந்தபாடில்லை.
இதுகுறித்து விவாதிக்க இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஏற்பாடு செயப்பட்டு இருந்தது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது
இதில் காங்கிரஸ் சார்ப்பில் முன்னாள் மணிப்பூர் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அக்கட்சி பொதுச்செயலாளர், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா , அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். இதில் அனைத்து கட்சியினரும் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தங்கள் ஆலோசனைகளை வழங்குவர்.