கடந்த செப்.18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குறிப்பாக, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன்பிறகு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற மக்களவை, மாநிலங்களவைகளில் விவாதங்கள் நடந்தது.
அதன்பிறகு நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 4ம் தேதி தொடங்குகிறது என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்திருந்தார். இந்த மழைக்கால கூட்டத்தொடர் டிசம்பர் 22ம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 15 அமர்வுகளாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதுபோன்று, மொத்தம் 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில், அதி்ல 12 மசோதாக்களை நிறைவேற்றவும், 6 மசோதாக்களை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது. 18 மசோதாக்கள் உட்பட முக்கிய அலுவல்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளது.
ஆதித்யா எல்1 விண்கலம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது இஸ்ரோ!
இதில், குறிப்பாக இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
டிச.4ம் தேதி முதல் தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதும் தேவை. அதுமட்டுமில்லாமல், அமைதியான சூழல் வேண்டும்.
இதனால் மழைக்கால தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு கேட்டு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சியின் எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர். நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கிறது.
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண்…