பட்ஜெட் 2024 : இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு.!
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இம்முறை வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் வர உள்ளதால், இந்த வருடம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் குறுகிய கால பட்ஜெட்டாக மட்டுமே இருக்கும். இதுவே தற்போது ஆளும் பாஜக அரசின் கடைசி பட்ஜெட்டாக உள்ளது. அதனால், ஏதேனும் புதிய சலுகைகள் பற்றி அறிவிக்கப்படுமா என, புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமா என இந்த பட்ஜெட் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி! பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு!
ஏற்கனவே இந்த பட்ஜெட் விவரங்கள் அனைத்தும் இறுதி செய்யப்பட்டு, சில தினங்களுக்கு முன்னர் அல்வா (இனிப்பு) தயாரித்து நிதியமைச்சக அதிகாரிகளுக்கு வழங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது. இதனை அடுத்து நாளை குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்குகிறது.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரை முடிந்தவுடன், பிப்ரவரி 1ஆம் தேதியான நாளை மறுநாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தி முடிக்க இந்த கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.
முன்னதாக, நடைபெற்று முடிந்த மக்களவை கூட்டத்தொடரில் மணிபூர் விவகாரம், அதானி விவகாரம் என நாடாளுமன்ற அவைகள் முடங்கும் அளவுக்கு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.