#Breaking: “அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும்!” – மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு
மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது தொடா்பான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிவரும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 முன்பணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால், பொருட்கள் தேவை அதிகரித்து வியாபாரம் ஊக்கம் பெரும் என கூறிய அவர், மத்திய அரசுக்கு வட்டியில்லா கடனாக ரூ. 12,000 கோடி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, மாநில அரசுக்கு வழங்கப்படும் கடன் தொகையை திருப்பி செலுத்த 50 ஆண்டு கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளார்.