அதிரடி அறிவிப்பு.! அரசு பணி ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதல் 6 மாதம் அவகாசம் .!
அரசு பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டட பணிகளை முடிக்க ஆறு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
அதில், அரசு பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டட பணிகளை முடிக்க ஆறு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் , பொது முடக்கத்தால் முடிக்க இயலாத கட்டிட பணிகளை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் ஆறு மாதங்கள் நீட்டிப்பு என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.