- பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் விபத்தை ஏற்படுத்தியது.
- வாகனம் தாறுமாறாக சாலையில் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் தனியார் பள்ளி பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற வாகனம் மீது சரமாரியாக போதும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளன. கடந்த 22ம் தேதி காலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்ற பேருந்து ஒன்று திடீரென செயலிழந்தாது.அதனால் பேருந்தை நிறுத்த முயன்ற ஓட்டுநர் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதினார்.
இந்த சாலை விபத்தில் மாணவர்கள் மூவர் உட்பட 10_க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.கட்டுப்பட்ட இழந்த வாகனம் கடைசியில் சாலையோர தடுப்பில் மோதி நின்றது இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.