தெருநாய்களால் தாக்கப்பட்ட 8 வயது சிறுமி.! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.!

StrayDogs

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பாஹ் பிளாக்கில், 8 வயது சிறுமி ஒருவர் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்த போது தெருநாய்களால் தாக்கப்பட்டுள்ளார். குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தது. குழந்தை வீடு திரும்பிய பின்னர் இதுபற்றி பெற்றோரிடம் தெரிவித்தாலும், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

இதனை கவனிக்காமல் விட்ட நிலையில் சிறுமியின் உடல் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து, சிறுமி பாஹ் சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியைப் பார்த்த மருத்துவர்கள் ஆக்ராவின் எஸ்என் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கொண்டு செல்லப்பட்டதும் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய சிறுமியின் தந்தை, “என் குழந்தைக்கு நாய் கடித்ததில் சிறு காயம் ஏற்பட்டது. இன்னும் சில நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்தேன். இதேபோன்ற ஒரு சம்பவம் எனது அருகில் உள்ள மற்றொரு குழந்தைக்கு நடந்தது, சிறுவன் நன்றாக இருக்கிறான். ஆனால் எனது குழந்தையின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவளுக்கு அதிக காய்ச்சலால் பேச முடியவில்லை” என்று கூறினார்.

மேலும், மருத்துவர்கள் கூறுகையில், “தெரு நாயால் தாக்கப்பட்டக் குழந்தை 15 நாட்களுக்கு பிறகு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அதனால் அவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நாயால் தாக்கப்பட்ட உடனேயே குழந்தைக்கு ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி (ARV) போடப்படவில்லை. நாய், பூனை மற்றும் குரங்கு கடித்தால், உடனடியாக ரேபிஸ் தடுப்பு தடுப்பூசி போடுவது முக்கியம்.” என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்