டெல்லியைச் சேர்ந்த, 18 வயது இளம் பெண்ணுக்கு, ஒரு நாள் மட்டும், பிரிட்டன் நாட்டின் உயர் துாதரக அதிகாரியாக பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பிரிட்டன் துாதரகம் சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், ‘ஒரு நாள் உயர் துாதர்’ என்ற போட்டியை, ஒவ்வோர் ஆண்டும் நடத்தி வருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் நடத்தப்படும் இந்த போட்டியில் பங்கேற்க, 18 – 23 வயது இளம் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த போட்டியில், சைதன்யா வெங்கடேஸ்வரன், 18, என்ற பெண் வெற்றி பெற்றார். இதையடுத்து, இவர், கடந்த 7ம் தேதி, டில்லியில் உள்ள பிரிட்டன் துாதரகத்தில், துாதரக அதிகாரியாக, அவர் பணியாற்றினார். இதுகுறித்து சைதன்யா கூறியதாவது:டில்லியில் உள்ள பிரிட்டன் கவுன்சில் நுாலகத்திற்கு, இளம் வயதில், நான் பல முறை சென்றுள்ளேன். அங்கு தான், கற்றல் மீதான என் ஆர்வத்தை நான் வளர்த்தேன். பிரிட்டன் துாதராக, நான் இருந்தது, எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு என்று அவர் கூறினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…