அம்ரித் கால், கர்தவ்ய காலாக மாற்ற வேண்டும்-பிரதமர் மோடி.!
அம்ரித் கால், கர்தவ்ய காலாக மாற்றப்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அடுத்து வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக முக்கிய தலைவர்கள் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறுகையில், இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரப்போகிறது என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார், மேலும் அம்ரித் கால், கர்தவ்ய காலாக மாற்றப்பட வேண்டும், அப்போதுதான் நாடு வேகமாக முன்னேற முடியும் என்று மோடி கூறினார் என செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்தார்.
18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் இந்தியாவின் அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ளவேண்டும் என்றும், முந்தைய அரசாங்கங்களில் நடந்த ஊழல்கள் மற்றும் தவறான செயல்கள் குறித்து அவர்களுக்குத் தெரியாது, இவை குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தியதாக ஃபட்னாவிஸ் கூறினார்.