பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக அம்ரீந்தர் சிங் ராஜா பொறுப்பேற்பு …!
பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக கட்சிக்குள்ளேயே பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி அம்ரீந்தார் சிங்கிடம் இருந்து பறிக்கப்பட்டு நவ்ஜோத் சிங் சிந்துவுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, இதற்கு காரணம் நவ்ஜோத் சிங் சித்து தான் என குற்றம் சாட்டபட்டது.
எனவே, இதற்கு பொறுப்பேற்று அவர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராக மீண்டும் அம்ரீந்தர் சிங் ராஜா அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்று உள்ளார். மேலும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயல் தலைவராக பாரத் பூஷன் அஷூ அவர்கள் பொறுப்பேற்றுள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அம்ரீந்தர் சிங், கட்சிக்காக ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் உரையாடல் ஆகிய மூன்றையும் மந்திரமாக வைத்து செயல்படுவேன் என கூறியுள்ளார்.
Discipline, Dedication and Dialogue will be my 3-D mantra for working for and strengthening the party. pic.twitter.com/bO24JqgfW0
— Amarinder Singh Raja (@RajaBrar_INC) April 22, 2022