கர்ப்பிணி பசுவுக்கு வெடிமருந்து.. கேரளாவை அடுத்து, இமாச்சல் பிரதேசதில் நடந்த சோகம்!
இமாச்சல் பிரதேசத்தில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடிமருந்து வைத்துக்கொடுத்ததில், அந்த பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கேரளா மாநிலதில் அன்னாசிபழத்தில் வெடிமருந்தை வைத்து யானைக்கு உணவாக அளித்துள்ளனர். அது வெடித்து, அந்த யானையில் வாயில் பெரும் காயத்தை ஏற்படுத்திய நிலையில், அது உணவருந்தாமல் இருந்தது. இந்நிலையில், அந்த யானை ஆறு ஒன்றில் நின்றபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யானையின் உடலை மீட்ட வனத்துறையினர், பிரேத பரிசோதனை நடத்தும்போது கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனையடுத்து, யானைக்கு நேரிட்ட இந்த கொடூரமான செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அந்த வழக்கில் ஒருவரை கேரளா வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், இது போன்ற சம்பவம் இமாச்சல் பிரதேசத்தில் அரங்கேறியது. இமாச்சல் பிரதேஷ் மாநிலம், பிலாஸ்பூர் மாவட்டம், ஜன்துட்டா பகுதியை சேந்தவர், சூர்தயாள் சிங். இவரின் பசுவுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன், கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுத்ததில் வெடி வெடித்து, அந்த பசுவின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது.
சத்தம் கேட்டு வெளியே வந்த சூர்தயாள் சிங், பசுவுக்கு வெடி வைத்து உணவளித்தது தெரியவந்தது. இதனால் பசுவின் வாய் பகுதியில் பலத்த காயமடைந்ததை கண்டறிந்தார். இது தொடர்பாக, மே மாதம் 26 ஆம் தேதி அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தார். இந்த வழக்கில், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் நந்த் லால் திமான் என்பவரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.
மேலும் காயமடைந்த அந்த பசுவின் விடியோவை அவர் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார். இதனால் இந்த சம்பவம், பலருக்கும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி அந்த பசு, விபத்து நடந்து சில நாட்களுக்கு பின் அது கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றது குறிப்பிடத்தக்கது.