இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு.. 28 தொழிலாளர்களுக்கு உடல் நலக்குறைவு..
பாலசோர் இறால் ஆலையில் திடீரென அம்மோனியா வாயு கசிந்ததில் 28 தொழிலாளர்கள் உடல் நலக்குறைவு அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் ஆலையில் இருந்து புதன்கிழமை(செப் 28) கசிந்த அம்மோனியா வாயுவை சுவாசித்ததால் 28 தொழிலாளர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்ட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு குழுவினர் ஹைலேண்ட் அக்ரோ ஃபுட் பிரைவேட் லிமிடெட் இறால் தொழிற்சாலையினுள் அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்டிருந்த 28 தொழிலாளர்களை மீட்டு கந்தபாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றி டாக்டர் ஜூலால்சன் கூறுகையில், 4 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து பாலசூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.