ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், பைப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 20 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்சாலை துறை பொது மேலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருப்பதாகவும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…
டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…
கொழும்பு : இலங்கை vs ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை வெறும் 165 ரன்களுக்கு…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள…
தேனி : அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு…
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…