ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு! 20 பேர் மருத்துவமனையில் அனுமதி!
ஆந்திர மாநில ஹட்சன் பால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு.
ஆந்திரா மாநிலம் சித்தூர் அருகே உள்ள ஹட்சன் பால் தொழிற்சாலையில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை 5 மணிக்கு திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட நிலையில், பைப் ஒன்றில் வெல்டிங் செய்து கொண்டிருந்த போது அதிலிருந்து அமோனியம் வாயு கசிந்துள்ளது.
இந்நிலையில், அங்கு பணியில் இருந்த 20 பெண்கள் அடுத்தடுத்து மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக தொழிற்சாலை துறை பொது மேலாளர் தலைமையில் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டிருப்பதாகவும், விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.