ஆந்திராவில் ஒரு தொழில்சாலையில் அமோனியா வாயு கசிவு! நிறுவனத்தின் பொது மேலாளர்!
ஆந்திராவில் ஒரு தொழில்சாலையில் அமோனியா வாயு கசிவு.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருக்கும், ஆர்.ஆர்.வெங்கடாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள தென் கொரிய நிறுவனத்தின் ரசாயன தொழிற்சாலையில் கடந்த மாதம் விபத்து ஏற்பட்டது.
தொழிற்சாலையிலிருந்து, ‘ஸ்டைரீன்’ என்ற விஷவாயு கசிந்தது. தொழிலாளர்கள், பாதுகாப்பு உடைகள் அணிந்து பணியில் ஈடுபட்டதால், விஷவாயு கசிவால் அவர்கள் பாதிக்கப்படவில்லை, விஷவாயு கசிந்ததும் அவர்களுக்கு தெரியவில்லை. அது காற்றில் கலந்து, 3 கிலோ மீட்டர் துாரம் பரவிய நிலையில், இதனால், ஐந்து கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
இந்த விபத்தில் பல பேர் உயிரிழந்தனர். மேலும் 1,000க்கும் அதிகமானோர் சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதனையடுத்து விஷவாயு கசிவால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த சோகம் மறைவதற்குள்ளாக,கர்னூல் மாவட்டத்தின் நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய். அக்ரோ நிறுவனத்தில்ஆலையில் இருந்து அம்மோனியா எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த எரிவாயு கசிவினால், அந்நிறுவனத்தின் பொது மேலாளர் சீனிவாஸ் ராவ் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.