கேரளாவில் ‘அம்மையும் குஞ்சும்’ என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ்.
கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள அரன்முலா தொகுதியில் ‘அம்மையும் குஞ்சும்’ (தாயும்-குழந்தையும்) என்ற வாட்ஸ் அப் குரூப்பை தொடங்கி மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார் பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜ். இந்த வாட்ஸ் அப் குரூப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளை வைத்துள்ள தாய்மார்கள் என பலரும் இணைந்து எளிய முறையில் மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு சந்தேகங்களை தீர்த்துக்கொள்கின்றனர். ஆரன்முலா தொகுதி பெண் எம்.எல்.ஏ. வீணா ஜார்ஜின் இந்த புதிய முயற்சிக்கு அரசியல் கட்சிகளை கடந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மேலும், இந்த ‘அம்மையும் குஞ்சும்’ வாட்ஸ் அப் குரூப்பில் மகப்பேறு மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவர்கள், கவுன்சிலிங் கொடுக்கக் கூடிய மனநல ஆலோசகர்கள் என பலரும் உள்ளனர். பின்னர் இந்த வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள யாரேனும் சந்தேகமோ, ஆலோசனையோ கேட்டால் உடனடியாக பதில் அளிக்கின்றனர். இதனிடையே கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக வெளியில் வரமுடியாத இடிந்த நிலையில், எந்தவொரு அலைச்சல் இல்லாமல், செலவு இல்லாமல், இருந்த இடத்தில் இருந்தே மருத்துவ உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ள வீணா ஜார்ஜ் எம்.எல்.ஏ.வுக்கு கேரளாவில் பல்வேறு தரப்பு மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : தவெக தலைவர் விஜய் தலைமையில் இன்று பனையூரில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், பொதுச் செயலாளர் ஆனந்த் முன்னிலையில், தவெக செயற்குழு மற்றும்…
சென்னை : தென் கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து…
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' படம் சூர்யாவின் 42வது படமாகும். இப்படத்தில் சூர்யாவைத் தவிர,…
சென்னை : பனையூரில் நடைபெறும் தவெக செயற்குழு கூட்டம் முதல் நியூசிலாந்து VS இந்தியா மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…