மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு தி.மு.க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியாக கூறப்படுகிறது.
இது குறித்த செய்தி இதோ:-
நாடளுமன்ற தி.மு.க கொறடாவும், மூத்த எம்.பியுமான ராஜாவிடமிருந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த கடித்தத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நம் நாட்டில், காவல்நிலைய விசாரணைகளின்போது ‘லாக் அப்’ மரணங்கள் இன்னமும் நிகழ்ந்து கொண்டிருப்பது, மிக துரதிர்ஷ்டவசமானது. கைது செய்யும் போதும், அதன்பின் விசாரணை நடத்தும்போதும், போலீசார் எவ்விதமான வழிமுறைகளை கையாள வேண்டுமென்ற விதிகள் வகுக்கப்பட்டு, அவை சட்டமாக உள்ளது.சட்டத்தின் கீழ் கைது செய்யும் உரிமை, போலீசாருக்கும் இருப்பதைப்போல தன் மீது மனித உரிமை மீறல்கள் நடக்காதபடி, தன்னை காத்துக் கொள்வதற்கான உரிமையும், கைதானவருக்கும் உள்ளது.இதற்காக 1994ல் தாக்கலான, சட்டக் கமிஷனின் 152வது அறிக்கையில், குற்றவியல் சட்ட நடைமுறைகள் குறித்து, பல்வேறு பரிந்துரைகள் செய்யப்பட்டு உள்ளது, அதற்கேற்ப நாடாளுமன்ற்த்திலும் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன்பின்பும் சித்ரவதைகள் தொடரவே, நீதிபதி சவுகான் தலைமையிலான சட்டக் கமிஷனின், 273வது அறிக்கையின் படி, புதிய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளப்பட்டு கடந்த 2017ல், சித்ரவதை தடுப்புச் சட்ட மசோதாவானது வடிவமைக்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது கிடப்பிலேயே கிடக்கிறது. சாத்தான்குளம் போன்ற சம்பவங்கள், தொடரும் போது இவ்விவகாரத்தில் இனியும் காலதாமதம் செய்யக்கூடாது. எனவே வரும் கூட்டத்தொடரிலே, இம்மசோதாவை நிறைவேற்ற வேண்டும் அல்லது ஜனாதிபதி மூலமாகவோ அவசர சட்டமாக பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சருக்கு எழுதப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடிதத்திற்கு பதில் கடிதத்தை எதிர்பார்த்து எதிர்தரப்பு காத்திருப்பதாக வட்டார தகவல்கள் கசிந்து உள்ளன.
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…