வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய அமித்ஷா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காவலர் வீரவணக்க நாளான இன்று நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உள்துறை அமைச்சரான அமித்ஷா டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
அதனுடன் கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக முன்கள பணியாளர்களாக பணியாற்றிய 343 காவலர்கள் தங்களது உயிரையே தியாகம் செய்துள்ளதாகவும், அவர்களின் தியாகத்தை நாம் என்றும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த தேசிய காவலர் நினைவகம் வெறும் செங்கல், சிமெண்டுகளால் மட்டும் கட்டவில்லை என்பதை அவர்களது குடும்பத்தினரிடம் கூற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.