மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதில் பாஜக கட்சி சார்பாக பாஜக தலைவர் அமித்ஷா தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, முன்னாள் பிரதமர் ஜவர்கலால் நேரு பற்றி சில விமர்சனங்களை முன்வைத்தார்.
அதாவது நேரு ஆட்சி காலத்தில் பாகிஸ்தான் மீதான போரை நிறுத்தி இருக்க கூடாது. அப்படி நிறுத்தாமல் இருந்திருந்தால் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்பது இருந்திருக்காது. மேலும், இந்த விஷயத்தை சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்திருக்க வேண்டும் என குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்தவர்கள் இங்கு பிரதமராக கூட ஆகி விடலாம், ஆனால், இந்தியாவில் உள்ள வெளி மாநிலங்களில் இருந்து காஷ்மீருக்கு செல்பவர்களுக்கு காஷ்மீரில் வாக்குரிமை கூட கொடுக்கப்படுவதில்லை என் குற்றம் சாட்டினார்.
இதனால் தான் மற்ற மாநிலங்களைப் போல காஷ்மீரும் இருக்க வேண்டும் எனக்கூறி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது. விரைவில், அங்கு பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவும்படி வழி வகை செய்யப்படும் என குறிப்பிட்டார்.
பிரச்சாரத்திற்கு வரும் காங்கிரஸ்காரர்களிடம் காஷ்மீர் விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளீர்கள் என அவர்களிடம் கேள்வி எழுப்புங்கள் என கூறி, அமித்ஷா தனது பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…