அமித் ஷாவின் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!
அமித் ஷாவின் விமானம் அகர்தலா செல்லும் வழியில், கவுகாத்தியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்ற விமானம் கவுகாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக உள்துறை அமைச்சரால் அகர்தலா மகாராஜா பிர் பிக்ரம் விமான நிலையத்தில் தரையிறங்க முடியவில்லை, இதனால் செல்லும் வழியிலேயே விமானம் தரையிறக்கப்பட்டது.
இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள திரிபுராவில் இரண்டு ரத யாத்திரைகளை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா அகர்தலாவுக்கு வரவிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 10 மணியளவில் MBB விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்தார். ஆனால் அடர்ந்த மூடுபனி காரணமாக அமித் ஷாவின் விமானம் கவுகாத்தியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கவுகாத்தியில் உள்ள ராடிசன் புளூ ஹோட்டலில் இரவைக் கழித்த அமித் ஷா, திரிபுரா சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக இன்று காலை அகர்தலாவுக்கு செல்வதாக கூறப்பட்டது.