கடந்த 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து,பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்துவிட்டார்.சட்டமும் அமலுக்கு வந்துவிட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்த சட்டத்திற்கு ஆதரவாக மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக கர்நாடகாவின் ஹூப்ளி நகரில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு மாநாடு நடைபெற்றது.இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலிருந்து வரும் தலித்துகளுக்கு எதிராக இருப்பதால் உங்களுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்திக்கு நேரடியாக சவால் விடுக்கிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தை முழுமையாக படித்து , முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மாட்டோம் என்று இருந்தால் ராகுலுடன் மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி விவாதம் நடத்த தயாராக உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…