பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர வேண்டும் !பாஜக கூட்டத்தில் முடிவு
பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று பாஜக மாநில தலைவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாஜக தலைமை அலுவலகத்தில் அமித்ஷா தலைமையில் நடைபெற்றது.அமித் ஷா உள்துறை அமைச்சராக பதவி வகிக்கும் நிலையில் பாஜகவின் தேசிய தலைமைக்கு புதிய தலைவரை தேர்வுசெய்வது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் நடக்கவிருப்பதால் பாஜக தேசிய தலைவராக அமித்ஷாவே தொடர அனைத்து மாநில தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் ஹெச்.ராஜா பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.