காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக உள்ளேன்! அமித்ஷா ஆவேச பேச்சு!
காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து , ஜம்மு காஷ்மீர் – லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை தாக்கல் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. நேற்று மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இன்று, மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவர், தாக்கல் செய்தது முதல், எதிர்க்கட்சிகள், கடுமையான விவாதங்களை முன்வைத்து வருகிறது. இதற்க்கு பதிலளித்த அமித்ஷா, நான் காஷ்மீருக்காக என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என ஆவேசமாக தெரிவித்து வருகிறார்.