Categories: இந்தியா

குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யும் அதிகாரம் எந்த மாநில அரசுக்கும் இல்லை.. அமித்ஷா அதிரடி.!

Published by
மணிகண்டன்

Amit shah : மத்திய அரசு 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை நேற்று முன்தினம் மத்திய அரசு சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்தது. அதன்படி, நமது நாட்டின் அண்டைய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு 2014, டிசம்பருக்கு முன்னர் இந்திய வந்து குடியேறிய (குறைந்த பட்சம் 6 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்து இருக்க வேண்டும்) இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சமணர்கள் ஆகியோருக்கு (இஸ்லாமியர்கள் தவிர) குடியுரிமை வழங்கப்படும் என சட்டம் வழிவகை செய்கிறது. மற்றவர்களுக்கு பழைய குடியுரிமை சட்டத்தின்படி 11 ஆண்டுகள் இந்தியாவில் இருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்.

Read More – தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் செய்தி.. 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு..!

இந்த சட்டமானது, மதத்தின் அடிப்படையில் மக்களை பிரிக்க நினைக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு. இங்கு மதத்தின் அடிப்படையில் குடியுரிமை என்பது ஏற்க கூடியது அல்ல என காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்திய குடியுரிமை திருத்த சட்டம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது என தெரிவித்தார்.

இப்படியான சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நேற்று தனியார் செய்தி நிறுவனமான ANIக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அதில், இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு பதில் கூறினார்.

Read More – பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்.? புதிய சிக்கலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!

அதில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தின்  கீழ் யாருக்கும் குடியுரிமை மறுக்கப்படவில்லை. நமது பாரதத்தின் கீழ் இருந்த அனைவருக்கும் (சுதந்திரத்திற்கு முன்னர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் , மியான்மர், வங்கதேசம் ஒன்றிணைந்து இருந்த பாரதம்) இந்தியாயாவில் குடியுரிமை உண்டு. அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கி வருகிறோம்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு உதவ இந்த சட்டம் தேவை. சுதந்திரத்தின் போது பாகிஸ்தானில் 23 சதவீத இந்துக்கள் இருந்தார்கள். ஆனால் தற்போது 3.9 சதவீதம் மட்டுமே இருக்கிறார்கள். அங்கு சிறுபான்மையாக இருக்கும் இந்துக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இதுபோல் மற்ற அண்டை நாடுகளில் இருக்கும் சிறுபான்மையினர்களுக்காக தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களும் இந்தியக் குடியுரிமை பெற அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இஸ்லாமியர்களும் பழைய சட்டத்தின் படி (11 ஆண்டுகள்) குடியுரிமை பெற விண்ணப்பிக்கலாம்.

Read More – மதுரை மக்களே ரெடியா.? சித்திரை திருவிழா முக்கிய தேதிகள் அப்டேட்ஸ்…

இத்திட்டத்தின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் இரண்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஒன்று அவர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். மற்றொன்று அவர்கள் டிசம்பர் 31, 2014 க்கு முன்னர் இந்தியாவிற்குள் நுழைந்ததை உறுதிப்படுத்த சான்று கொண்டு வரவேண்டும்.

விண்ணப்பித்த உடன் அவர்கள் மத்திய அரசு அதிகாரிகள் முன்பு நேர்காணலுக்கு வரவேண்டும். அரசின் மதிப்பீட்டின்படி,  இந்தியாவில் குடியுரிமை பெற விரும்புவோர்களில் சுமார் 85% மக்களிடம் தேவையான ஆவணங்கள் உள்ளன. எந்த ஆவணமும் இல்லாதவர்களுக்கு அரசு விரைவில் மாற்று வழியை கூறும் என்று அமித்ஷா கூறினார்.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு பற்றி அமித்ஷா கூறுகையில், வாக்குவங்கி அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பை கையில் எடுத்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை மாநில அரசுகள் ரத்து செய்ய எந்த அதிகாரமும் இல்லை. மம்தா பேனர்ஜி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் பொய் பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர் எனவும் விமர்சனம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

Recent Posts

சிபிஎம் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு!

சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…

4 hours ago

ரெடியா மாடுபிடி வீரர்களே? ஜல்லிக்கட்டு முன்பதிவு நாளை தொடக்கம்!

சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…

4 hours ago

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

5 hours ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

6 hours ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

8 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

8 hours ago