இந்தியா – பாகிஸ்தான்.. இந்தியா – வங்கதேசம்.! 560 கிமீ வேலி.! அமித்ஷா பெருமிதம்.!
இந்திய எல்லை பாதுகாப்பு படையான Border Security Force எனும் BSF அமைப்பு உருவாக்கப்பட்டு 59 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் ஹசாரிபாக்கில் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு வீரர்களின் அணிவகுப்பபை ஏற்றுக்கொண்டார்.
அதன் பிறகு அந்தநிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ‘ பிரதமர் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சிக்கு வந்த கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா-பாகிஸ்தான் மற்றும் இந்தியா-வங்காளதேசம் எல்லைகளில் சுமார் 560 கிலோமீட்டர் தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டு, இரு நாடுகளுக்கு இடையேயேயான இடைவெளிகளை அமைத்துள்ளோம்.
அரசின் திட்டங்கள் எம்பிக்கள் போஸ்டர் ஓட்டுவதற்கு பயன்பட கூடாது.! பிரதமர் மோடி பேச்சு.!
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையானது, 2,290 கிமீ தூரம் கொண்டது. அதே போல, இந்தியா-வங்காளதேச எல்லையானது 4,096 கிமீ நீளம் கொண்டது. நதி, மலை மற்றும் சதுப்பு நில காடுகளில் பாதுகாப்பு எல்லை வேலிகள் அமைப்பது மிகவும் கடினம். அதனை தவிர்த்து மற்ற இடங்களில் வேலி அமைக்கப்பட்டுள்ளது.
எல்லைகள் பாதுகாப்பாக இல்லாவிட்டால் ஒரு நாடு வளர்ச்சியடையாது, செழிமை இருக்காது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் சந்திரயான் திட்டம், ஜி 20 உச்சிமாநாடு திட்டங்கள் மூலம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது..
எல்லைகளில் வேலி அமைப்பது மட்டும் நாட்டைப் பாதுகாக்காது என்று நான் நம்புகிறேன். நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியை செய்வதற்கு துணிச்சலான BSF ஜவான் வீரர்கள் தேவை என்று அமித்ஷா கூறினார். மேலும், BSF போன்ற வீரர்கள் எல்லைகளை பாதுகாப்பதற்காக நிறுத்தப்பட்டதால் இது சாத்தியமானது. என்றும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.