வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும் வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம் இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமித் சா,”நான் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் வடகிழக்கு தவிர வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற இயற்கை அழகை நான் பார்த்ததில்லை என்று கூறினார். இந்நிலையில், வரும் ஆண்டுகளில் இப்பகுதி, சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறும் என்று அவர் தெரிவித்தார். சுதந்திரத்தின் போது, வடகிழக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% பங்களித்தது, ஆனால் அது படிப்படியாக பல ஆண்டுகளாக குறைந்துவிட்டது என்றார்.
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது. இது அடுத்த…
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…