வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா

Default Image

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியை முன்நிறுத்தி நடத்தப்படும்  வட கிழக்கு -2020 மாநாட்டை தொடங்கி வைத்தார் அமித் சா.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா நேற்று வடகிழக்கு 2020 என்ற மாநாட்டை தொடங்கி வைத்தார்.பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம், மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் காணொளி காட்சி மூலம்  இந்த மாநாட்டின் தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சில், வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங் மற்றும் அசாம், அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில்  பேசிய அமித் சா,”நான் நாட்டிலும் வெளிநாட்டிலும் பல  சுற்றுலா தலங்களுக்குச் சென்றுள்ளேன். ஆனால் வடகிழக்கு தவிர வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற இயற்கை அழகை நான் பார்த்ததில்லை என்று கூறினார். இந்நிலையில், வரும் ஆண்டுகளில் இப்பகுதி, சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறும் என்று அவர் தெரிவித்தார். சுதந்திரத்தின் போது, ​​வடகிழக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% பங்களித்தது, ஆனால் அது படிப்படியாக பல ஆண்டுகளாக குறைந்துவிட்டது என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்