நாளை 44,700 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார் அமித்ஷா.!
மத்திய அமைச்சர் அமித்ஷா நாளை அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்ல உள்ளதை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசாமில் புதிதாக அரசு வேளையில் சேர உள்ள 44,700 பேருக்கு நாளை அம்மாநில முதல்வர் பணி நியமன ஆணையை வழங்குகிறார்.
1 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான தனது உறுதிமொழியை நிறைவேற்ற, அசாம் அரசு மே 25 அன்று வெற்றி பெற்ற 44,703 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழங்கும் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியை கவுகாத்தியில் உள்ள கானாபராவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த விழாவில் பங்கேற்க அமித்ஷா அசாம் செல்கிறார். அத்துடன் அங்கு புதிய தேசிய தடய அறிவியல் பல்கலை கழகத்திற்கும் அடிக்கல் நாட்ட உள்ளார் அமித்ஷா. மேலும், 22,765 பதவிகளுக்கான கூடுதல் விளம்பரங்களை இந்த ஆண்டு ஜூலை மாதம் மாநில அரசு வெளியிடும் என்றும் அசாம் முதல்வர் கூறியுள்ளார்.