காஷ்மீர் விவகாரம் : இரு அவைகளிலும் அமித்ஷா முக்கிய அறிவிப்பு!
காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமைச்சரவைக் கூட்ட முடிவுகள் பற்றி பேச இருப்பதால் பாஜக உறுப்பினர்கள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக உறுப்பினர்கள் ஆஜராக வேண்டும் என கொறடா உத்தரவு விட்டு உள்ளார்.
இந்நிலையில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிக்க உள்ளார்.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமித்ஷா பேச உள்ளார்.மேலும் காஷ்மீருக்கு வெளிமாநில பத்திரிகையாளர்கள் வர வேண்டாம் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.