“அமித்ஷாவுக்கு எந்த தகுதியும் இல்லை” வங்கதேச அமைச்சர் ..!!
இந்தியாவில் வசிக்கும் வங்கதேசத்தவரை ‘கரையான்கள்’ என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியிருப்பதற்கு, வங்கதேச தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஹசனுல் ஹக் இனு கண்டனம் தெரிவித்துள்ளார்.
“அமித்ஷா தேவையில்லாமல் கருத்துத் தெரிவித்துள்ளார்; இது முறையற்றது” என்று கூறியுள்ள ஹசனுல் ஹக், “ வங்கதேசத்தவர் எவரும் இந்தியாவில் குடியிருக்கவில்லை” என்றும் “வங்கமொழி பேசுவோர் எல்லோருமே வங்கதேசத்தவர் என கருதக் கூடாது” என்றும் அமித்ஷாவுக்கு புத்திமதி கூறியுள்ளார்.“இந்திய வங்கதேச உறவு குறித்துப் பேச, அமித் ஷாவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது” என்று சாடியுள்ள ஹசனுல், “அமித் ஷா பேச்சுக்கு நாங்கள் முக்கியத்துவம் தர விரும்பவில்லை; ஏனெனில் இது இந்திய அரசின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்” என்றும் கூறியுள்ளார்.
மேலும், “இவ்விஷயத்தில், உண்மை நிலை என்ன என்பதை அமித் ஷாவுக்கு அவரது கட்சி எடுத்துக் கூறினால் நல்லது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
DINASUVADU