நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது – அமித் ஷா
நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறுகையில், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது. விவசாயிகள் மேலும் கடன் வாங்காத அளவுக்கு ஆண்டு உதவித்தொகை திட்டம் உதவும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.