20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி காங்கிரஸ் தோல்வி.! அமித்ஷா கடும் விமர்சனம்.!

Rahul Gandhi - Union Minister Amit shah

Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார்.

இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்ட தேர்தல் மே 7ஆம் தேதியும், அதற்கடுத்து மே 13ஆம் தேதியும், 7ஆம் கட்ட (இறுதி) தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தல் சமயம் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சிக்கவும் அரசியல் கட்சி தலைவர்கள் தவறுவதில்லை.

முன்னதாக கேரள மாநிலம் வயநாட்டில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி, இன்று உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியலும் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ராகுல் காந்தி அதிகமுறை வென்ற அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரேபரேலி தொகுதியில் ராகுல் வேட்புமனு செய்ததை பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே, பிரதமர் மோடி , வயநாட்டில், தான் தோற்றுவிடுவோம் என்ற பயத்தின் காரணமாக ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என விமர்சனம் செய்து இருந்தார். அதே போல கடந்த முறை ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘ தேர்தலுக்கு முன்பே ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டு பினாமி வேட்பாளரை களமிறக்கி உள்ளார் ‘ என விமர்சனம் செய்தார்.

இன்று, கர்நாடகா மாநிலத்தில் சிக்கோடி மக்களவைத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், நாங்கள் சந்திரயான்-3யை விண்ணில் ஏவினோம். அது வெற்றியடைந்தது. சோனியா காந்தி கிட்டத்தட்ட 20 முறை ராகுல் காந்தியை முன்னிருத்தி தேர்தலில் வெல்ல முயற்சித்துள்ளார் ஆனால் தோல்வி கண்டார் என விமர்சித்து உள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைவார். அங்கு பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ராகுல்காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைவார்.

ராகுல் காந்தி அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொண்டு வெளிநாடு சென்று விடுவார். அதே நேரம், கடந்த 23 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை.  ஒரு பக்கம், 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த காங்கிரஸ் கட்சி, மறுபுறம், கடந்த 23 ஆண்டுகளாக, எந்த ஒரு குற்றச்சாட்டும் இல்லாமல், மாநில முதல்வராகவும், பிரதமராகவும் தேசத்திற்கு சேவை செய்த பிரதமர் மோடியின் பெயர் ஒருபுறம் என ராகுல் காந்தி பற்றியும், காங்கிரஸ் கட்சி பற்றியும் தனது விமர்சனங்களை மத்திய அமைச்சர் அமித்ஷா கர்நாடகா பிரச்சார கூட்டத்தில் பதிவு செய்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்