கடந்த வாரம் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வடமேற்கு டெல்லியிலுள்ள ஜஹாங்கிர்புரி பகுதியில் இரு வேறு சமூகத்தினர் இடையே பெரும் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக டெல்லி நிர்வாகம் அப்பகுதியில் இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்களை புல்டோசர் கொண்டு தகர்த்தது.
இந்நிலையில் இது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அவர்கள் மேற்கு மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சி பேரணியில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் டெல்லியை சாதிக் கலவரங்களில் இருந்து பாதுகாக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது டெல்லியில் நடைபெற்ற வன்முறை குறித்து பேசிய அவர், டெல்லி முழுவதும் அரவிந்த் கெஜ்ரிவால் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், டெல்லி காவல்துறை அமித்ஷாவின் கையில் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் ஏதாவது நடந்தால் அது உலகம் அறியக்கூடிய செய்தியாக மாறும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இவ்வாறெல்லாம் நடந்தால் டெல்லியில் அமைதி இன்றி இருப்பதாக உலகம் கற்பனை செய்து விடும். உங்களிடம் அதிகாரம் தான் உள்ளது. ஆனால் டெல்லியை கையாள முடியாது என அமித்ஷாவை குறிப்பிட்டு பேசியுள்ளார் சரத்பவார்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…