டெல்லி வன்முறை : 24 மணி நேரத்திற்குள் 3 முறை ஆலோசனை நடத்திய அமித் ஷா

Default Image

வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது மூன்றாவது கூட்டத்தை 24 மணி நேரத்திற்குள் நடத்தியுள்ளார். மோதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.இந்த கூட்டத்தில் லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜல்,டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.டெல்லியில் ஏற்ப்பட்ட வன்முறை காரணமாக அமித் ஷா இன்று செல்லவிருந்த கேரளா பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இதனிடையே கடந்த சில மாதங்களாக டெல்லியில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பல்வேறு பகுதியில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் வடகிழக்கு டெல்லியில் கடந்த 2 நாட்களாக சிஏஏக்கு எதிராக போராட்டங்களை நடைபெற்றன. இந்த போராட்டத்தில் ஆதரவாளர்களுக்கும், எதிர்பார்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த மோதலால் ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், பஜன்புரா போன்ற பகுதிகள் கலவர பூமியாக மாறியது. இதில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி கொண்டு அடிதடியில் ஈடுபட்டு நேற்று தலைமை காவலர் ரத்தன் லால் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இதையெடுத்து இந்த வன்முறை தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் 3 முறை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வல் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கலவரத்தை கட்டுப்படுத்த ராணுவத்தை அனுப்புமாறு முதல்வர் அரவிந்த் கெஜிர்வல், அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்