இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மேற்கு வங்கம் சென்றடைந்தார் அமித்ஷா …!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநில தேர்தலுக்குப் பின்பதாக தற்பொழுது முதன்முறையாக மேற்கு வங்க மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமித்ஷாவின் இந்த வங்கத்து பயணம் வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் குறித்து பாஜக அமைச்சர்களுடன் கலந்து ஆலோசிப்பதற்காவும், மாநில பாஜக கட்சியில் உள்ள உட்கட்சி பூசல்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகவும் தான் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 5 ஆம் தேதி ஆம் தேதி இரவு அமித்ஷா பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் மேற்கு வங்கத்தைச் சென்று அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று சிலிகுரியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், நாளை வெள்ளிக்கிழமை மாநில பாஜக அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில நிகழ்ச்சிகளிலும் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025