மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமனம்
நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் , 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர்களுக்கான இலாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதில் மத்திய உள்துறை அமைச்சராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளார்.