முழு மருத்துவ பரிசோதனைக்காக தான் அமித் ஷா அனுமதி.. எய்ம்ஸ் அறிக்கை..!

Default Image

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மருத்துவர்களின் ஆலோசனைப்படி முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து, உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும் அமித்ஷா அனுமதிக்கபட்ட நிலையில், முழு மருத்துவ பரிசோதனைக்காக தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்