புதிதாக சிந்தியுங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள் மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை.!
புதிதாக சிந்தியுங்கள், தைரியமாக இருங்கள், முன்னோக்கிச் செல்லுங்கள், கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்துமாறு மாணவர்களுக்கு அமித் ஷா அறிவுரை.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில் உள்ள பிவிபி பொறியியல் கல்லூரியில் அம்ரித் மஹோத்சவ்-ஐ முன்னிட்டு மாணவர்களிடம் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டிற்காக உழைக்க மாணவர்களிடம் ஊக்குவித்தார். மேலும் அரசு வழங்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள், நாட்டை உலகில் முதலிடத்திற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினார்.
நாட்டிற்காக உங்கள் உயிரை தியாகம் செய்ய முடியாவிட்டால், உங்கள் தேசத்திற்காக வாழுங்கள், அதை உலகின் முதல் நாடாக மாற்றுங்கள். அதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பிரதமர் மோடி உங்களுக்கு வழங்கியுள்ளார் என்று அமித் ஷா கூறினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற கனவை, மாணவர்களை மனதில் வைத்தே கற்பனை செய்துள்ளார். ஏனெனில் இது தொழில்நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும்.
பாரம்பரிய மனநிலை மற்றும் கட்டமைப்பிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார், மேலும் புதிதாக சிந்திக்கவும், தைரியமாக இருக்கவும், முன்னேறவும் அவர்களை ஊக்குவித்து அமித் ஷா, மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.