மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்து டிவீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகின. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் தோனியின் திறமையும், கிரிக்கெட் திறனையும் சிலாகித்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டர் பக்கத்தில் தோனி குறித்தும், அவரது தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் சிலாகித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள டிவிட்டரில், ‘தோனி தனது தனித்துவமான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கானவர்களை தனது ரசிகனாக மாற்றியுள்ளார். வரும் காலங்களில் இந்திய கிரிக்கெட் அணியினை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பங்களிப்பார் என நம்புகிறேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். இனி கிரிக்கெட் உலகம் ஹெலிகாப்டர் ஷாட்களை மிஸ் செய்யும்.’ என பதிவிட்டுள்ளார்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…