செப்டம்பர் 14ஆம் தேதி ஹிந்தி திவாஸ் எனப்படும், ஹிந்தி தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினத்தன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் உண்டு. ஆனால், நம் பாரத நாட்டிற்கு பொதுமொழி இருப்பது மிகவும் அவசியம் ஆகும். அந்த மொழி உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வேலையை செய்ய முடியும்.’ என்பது போல பதிவிட்டு இருந்தார்.
அதன் பிறகான நிகழ்ச்சியிலும் இதே கருத்தை முன்மொழிந்தார். அமித்ஷாவின் இக்கருத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழக அரசியல் வட்டாரத்தில் அனைத்து அரசியல் கட்சியினரும் ஒருமித்த கருத்தாக அமித்சாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தற்போது அமித்ஷா தனது கருத்து தவறுதலாக மக்கள் மத்தியில் புரிந்துகொள்ளப்பட்டது. என விளக்கம் கொடுத்துள்ளார். அவர் குறிப்பிடுகையில், நான் ஹிந்தி மொழி பேசாத மாநிலத்தை சேர்ந்தவன். இந்திய மொழிகளை வலிமைப்படுத்தவேண்டும் என குறிப்பிட்டேன். தாய் மொழியில் தான் மாணவர்கள் எதனையும் எளிதாக புரிந்து கொண்டு கற்றுக்கொள்ள முடியும். தாய் மொழி தாண்டி வேற்று மொழியை ஒருவர் படிக்க போகிறார் என்றால் அது ஹிந்தியாக இருக்கலாம் என குறிப்பிட்டேன். நம் தாய்மொழி தவிர்த்து வேறு மொழி முக்கியதுவம் கொடுத்துவந்தால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போல தாய் மொழி மறந்து ஆங்கிலம் பேசும் நிலைமை வந்துவிட கூடாது என்பதற்க்காக இவ்வாறு கூறினேன். தவிர நமது தாய் மொழியை தான் முதலில் வலிமைப்படுத்தவேண்டும். என விளக்கம் கொடுத்தார்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…