நாளைக்குள் பாஜக ஐடி பிரிவிலிருந்து அமித் மால்வியாவை நீக்க வேண்டும் – சுப்பிரமணியன் சுவாமி
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருக்கும் அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்கப்படாவிட்டால், என்னை பாதுகாக்க விரும்பவில்லை என்றுதான் அர்த்தம் என தெரிவித்துள்ளார். இதனிடையே, பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக அமித் மால்வியா என்பவர் இருந்து வருகிறார். இவரது தலைமையின் கீழ் இயங்கும் பணியாளர்கள் தன்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மிகவும் மோசமாக உள்ளது. அதில் பணிபுரியும் உறுப்பினர்கள் சிலர் போலியான கணக்குகளை தொடங்கி, அதைக் கொண்டு என் மீது தனிப்பட்ட தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதற்கு என்னைப் பின் தொடரும் கோபக்கார நபர்கள் யாராவது பதிலடி கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு செய்யும் தவறுக்கு கட்சி எப்படி பொறுப்பேற்காதோ, அதேபோலத் தான் இதுவும் என்று கூறிருந்த நிலையில், தற்போது அமித் மால்வியாவை நாளைக்குள் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளார்.
By tomorrow If Malaviya is not removed from BJP IT cell (which is my five villages compromise proposal to Nadda) it means the party brass does not want to defend me. Since there is no forum in the party where I can ask for cadre opinion, hence I will have to defend myself.
— Subramanian Swamy (@Swamy39) September 9, 2020