6 கோடிக்கு போலி நகைகளை வாங்கிய அமெரிக்க பெண்!! தலைமறைவான தந்தை-மகன்! நடந்தது என்ன?

USA women

ஜெய்ப்பூர்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தான் செரிஸ். இவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு கடையில் ரூ.6 கோடி மதிப்பிலான போலியான நகைகளை வாங்கியுள்ளார்.

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் நகரில் இருக்கும் ஜோரி பஜாரில் கவுரவ் சோனி கடை உள்ளது. செரிஸ், தனது இன்ஸ்டாகிராம் மூலம் கவுரவ் சோனி என்ற நகைக்கடைக்காரரின் தொடர்பு கிடைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இந்தியா வந்தபோது இந்த கடையில் தங்க மூலம் பூசப்பட்ட வெள்ளி நகைகளை ரூ.6 கோடிக்கு செரிஸ் வாங்கியிருக்கிறார்.

அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த நகைகளை இவர் அங்கு நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் அவர் வாங்கிய நகைகளை காட்சிக்கு வைத்துள்ளார். அப்போது தான் அந்த நகை போலியான நகை என அவருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் இந்தியா திரும்பி வந்து கவுரவ் சோனியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அவரது குற்றச்சாட்டுகளை கவுரவ் சோனி அப்போது மறுத்துள்ளார்.

இதனால் மனஉளைச்சல் ஏற்பட்ட செரிஸ், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், தான் ஏமாற்றப்பட்டது குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்து அவர்களின் உதவியையும் நாடியுள்ளார். இதை தொடர்ந்து, இந்த மோசடி குறித்து விசாரிக்கும்படி அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஜெய்ப்பூர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும், காவல்துறையினர் தேடுவதை அறிந்ததும் கவுரவ் சோனியும் மற்றும் அவரது தந்தையுமான ராஜேந்திர சோனி தற்போது தலைமறைவாக உள்ளனர். இதை தொடர்ந்து தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்