பெண் கைதொழிலார்களுக்கு ரூ .1 கோடி மானியம் அறிவித்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்.!
பெண் கைதொழிலார்களை ஆதரிப்பதற்காக ரூ .1 கோடி மானியத்தை அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயைத் தொடர்ந்து இந்தியாவில் 19 மாநிலங்களைச் சேர்ந்த 12,000 க்கும் மேற்பட்ட பெண் கைதொழிலார்களை ஆதரிப்பதற்காக கிரெடிட் கார்டு வழங்குபவர் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் இன்று கைவினை மற்றும் கைதொழிலார்களின் சமூகமான “Dastkar’க்கு ரூ .1 கோடி மானியம் வழங்குவதாக அறிவித்தது.
நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, தஸ்த்கரின் கைவினை தொழிலார் ஆதரவு நிதிக்கு வழங்கப்படும் மானியம், ஊதியங்கள் மற்றும் மூலப்பொருட்களுக்கான நிதி உதவியையும், கண்ணாடி-வேலை எம்பிராய்டரிகள், நெசவாளர்கள், கூடை தயாரிப்பாளர்கள், ஃபைபர் கைவினை உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கைவினைகளில் ஈடுபடும் கைவினைஞர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.
இது குறித்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஒரு அறிக்கையில், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகண்ட், அசாம், குஜராத், இமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ஜார்காண்ட் தெலுங்கானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
.