சட்டத்தை திருத்துங்கள்…! மக்களின் சேமிப்பின் கதி என்ன? – சு.வெங்கடேசன் எம்.பி

Default Image

அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரனைக்கு உத்தரவிடுங்கள் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட். 

பாராளுமன்ற உறுப்பினர் தீபக் பாய்ஜ், அதானி குழும விவகாரம் குறித்தும், அதானி நிறுவன கடன் விவரங்கள் குறித்தும் கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வமாக பதில் அளித்து இருந்தார்.

நிர்மலா சீதாராமன் எழுத்துபூர்வ பதில் 

அதன்படி,  ஆர்பிஐ சட்ட விதிப்படி, எந்த ஒரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வெளியிட முடியாது. 1934 சட்ட விதிகளின்படி, பொது நிறுவனத்தின் கடன் விவரங்களை பொதுவெளியில் வெளியிட கூடாது. நிறுவனத்திற்கு கடன் வழங்கிய குறிப்பிட்ட வங்கியானது, கடன் விவரங்களை ஆர்பிஐக்கு தெரிவித்துவிடும். அப்படி அளிக்கப்பட்ட ஆவணங்கள் பாதுக்கப்பாக வைத்து இறுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

சு.வெங்கடேசன் எம்.பி  ட்விட்

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி  ட்விட்டர் பக்கத்தில், ‘அதானி குழுமம் வங்கிகளில் வாங்கிய கடன் விபரம் ரகசியமானவை. ரிசர்வ் வங்கி சட்டம் படி வெளியிட இயலாது – நிதியமைச்சர் LIC யில் பெற்றுள்ள கடன் 6182 கோடி. வங்கிகளில் பெறப்பட்டது இதைப்போல பல மடங்கு இருக்கும். அது மக்கள் பணம். அதைப்பற்றி அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு.

பறி கொடுத்தவர்கள் பக்கம் சட்டம் இல்லாமல் பறித்தவர் பக்கம் இருக்குமானால் அதில் ஒழிந்துகொள்வது அரசுக்கு அவமானம். சட்டத்தை திருத்துங்கள். மக்களின் சேமிப்பின் கதி என்ன? அதானியின் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் விசாரனைக்கு உத்தரவிடுங்கள்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்