உ.பி யில் தாயை இழந்த சோகத்தை மறைத்து கடமையை ஆற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்.
உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 33 வயதான பிரபாத் யாதவ் என்ற ஆம்புலன்ஸ் டிரைவர் தாயின் இறப்பு சோகத்தை மறைத்து 15 கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். உத்திரபிரதேசம் ஆக்ராவில் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை பார்க்கும் பிரபாத் 10 நாட்களுக்கு முன்பு கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது அவரது குடும்பத்தார் தாய் இறந்துவிட்டதாக செல்போனில் தகவல் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர் தன் தாய்க்கு ஆற்றும் கடமையைவிட தான் செய்து கொண்டிருக்கும் பணி மிகவும் முக்கியமானது என்று உணர்ந்து கடமை தவறாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் 15 நோயாளிகளை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு பிறகு 200 கி.மீட்டருக்கு அப்பால் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
மேலும் தனது தாய்க்கு இறுதி சடங்குகளை முடித்துவிட்டு மறுநாளே வேலைக்கு திரும்பியுள்ளார். கடந்த வருடம் கொரோனா தொற்றால் தனது தந்தையையும் இழந்த பிரபாத் மறுநாளே வேலைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
இதைப்பற்றி அவரிடம் கேட்கையில், பிரபாத் எனது தாய் இறந்தததை கேட்டு அதிர்ந்தேன், இருப்பினும் எனது உணர்வுகளை கட்டுப்படுத்தி கொண்டு வேலையை செய்தேன். நான் செய்யும் பணியை என்னால் கைவிட முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
சென்னை : மும்மொழி விவகாரம் தொடர்பாக மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் நேற்று மாலை கண்டன…
பட்டுக்கோட்டை : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடுவிக்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியானது முறையான சிபிஎஸ்இ (CBSE…
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை…
டெல்லி : இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்த ராஜேஷ் குமார் இன்று (பிப்ரவரி 18) பதவி ஓய்வு பெறுகிறார்.…
துபாய் : 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி பிப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷை எதிர்கொள்கிறது.…
சென்னை : பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 'பிங்க்' ஆட்டோ திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதற்காக ஆட்டோ முழுவதும் பிங்க்…