கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி மற்றும் அவரது உறவுக்கார நபர் பொன்னி என்பவரும் இருந்துள்ளனர்.
ஆம்புலன்ஸை நித்திஷ் ராஜ் என்பவர் ஓட்டியுள்ளார். கண்ணூரில் இருந்து இளையாவூர் அருகே சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலை ஓரம் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் முன்பகுதி பலத்த சேதம் அடைந்து, அதன் ஓட்டுனர் உட்பட ஆம்புலன்சில் இருந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளனர்.
அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் விரைந்து வந்து பிறகு விபத்தில் சிக்கியவர்களை மீட்க முயற்சித்துள்ளனர். பின் தீயணைப்பு துறையினருக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் முன்புறம் மிகவும் நசுங்கியதால் கதவுகள் வெட்டி எடுத்து தான் உள்ளே இருந்தவர்கள் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அப்பொழுது கொரோனா நோயாளி பிஜோய் மற்றும் அவரது சகோதரி, டிரைவர் ஆகிய மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உறவினர் பொன்னி என்பவர் மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலால் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது, ஆம்புலன்ஸ் விபத்தில் கொரோனா நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…