அம்பன் புயல் எதிரொலி – நீரினுள் மூழ்கிய விமான நிலையம்.!

Default Image

சூறைக்காற்றால் கொல்கத்தா விமான நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக கட்டட அமைப்புகள் இடிந்துவிழுந்து சேதமடைந்தன.

கடந்த 1999 ஆம் ஆண்டு வங்க கடலில் உருவான சூப்பர் புயலால் ஒடிசாவில் 10,000 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து 21 ஆண்டுகளுக்கு பிறகு வங்க கடலில் உருவான அம்பன் புயல் சூப்பர் புயலாக வலுவிழந்து, அதி தீவிர புயலாக மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே நேற்று மாலை கரையை கடந்தது. ஒரு மணி நேரத்துக்கு 190 கி.மீ வேகத்தில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலில் சிக்கி 12 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அம்பன் புயலால் கொல்கத்தாவில் நேற்று காலை முதலே கனமழை பெய்தது. மேலும், சூறைக்காற்றால் விமான நிலைய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டிருந்த, தற்காலிக கட்டட அமைப்புகள் இடிந்துவிழுந்து சேதமடைந்தன. மேலும், விமான நிலையங்கள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அனைத்தும் விமானங்களும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. அம்பன் புயல் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மேற்கு வங்கம் திகா பகுதி மற்றும் வங்கதேசம் ஹாதிய தீவுகள் இடையே கரையை கடக்க தொடங்கியது.

அப்போது மணிக்கு 160 முதல் 170 வரை அதிகபட்சமாக 190 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. புயலின் மைய பகுதியானது 30 கி.மீ விட்டதை கொண்டடிருந்தது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்தன. மின்கம்பங்கள் மற்றும் வீட்டின் மேற்கூரைகள் புயல் காற்றில் பறந்தன. மேலும் இரு மாநிலங்களில் கடல் சீற்றம் காணப்பட்டது. அலையின் உயரம் 5 மீட்டர் வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்