இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அழியாத பங்களிப்பைச் செய்தவர் அம்பேத்கர் – பிரதமர் மோடி
பாபாசாகேப்பின் சிந்தனைகள் நமது அரசுக்கு உத்வேகமாக உள்ளன என்று பிரதமர் மோடி ட்வீட்.
அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் அம்பேத்கர் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அழியாத பங்களிப்பைச் செய்தவர் அம்பேத்கர். அவரது கனவுகளை நிறைவேற்றுவதற்கான உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்தும் நாள் இது. தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் நலனுக்கான பாபாசாகேப்பின் சிந்தனைகள் நமது அரசுக்கு உத்வேகமாக உள்ளன. இதன் காரணமாகவே நமது திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களை மனதில் கொண்டு செயல்படுத்தப்பட்டு சமூக நீதிக்கான பல அளவுகோல்களை வகுத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
दलितों, पीड़ितों, वंचितों और शोषितों के कल्याण के लिए बाबासाहेब के विचार हमारी सरकार के लिए प्रेरणापुंज रहे हैं। यही वजह है कि हमारी सभी योजनाएं गरीब से गरीब को ध्यान में रखकर लागू की गई हैं और सामाजिक न्याय की दिशा में हमने कई मानदंड तय किए हैं। pic.twitter.com/dOJixnlLOj
— Narendra Modi (@narendramodi) April 14, 2022