மும்பையிலுள்ள அம்பேத்கர் இல்லம் பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்படும்- மகாராஷ்டிர முதல்வர்
மும்பையில் உள்ள அம்பேத்கரின் இல்லம் பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் இல்லம் – ராஜ்க்ருஹா, பாரம்பரிய கட்டிடமாக பாதுகாக்கப்படும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்திருக்கிறார். அம்பேத்கரின் இல்லத்திற்கு சென்று அம்பேத்கர் மற்றும் மறைந்த அவரது மனைவி ரமாபாய் அம்பேத்கரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர், அம்பேத்கர் நாட்டின் பெருமை என்றும், அவர் வாழ்ந்த இல்லம் வரலாற்று பொக்கிஷம் என்றும், அது பாரம்பரியச் சின்னமாக பாதுகாக்கப்படும், என்றும் கூறினார்.
மேலும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அருகிலுள்ள இந்து மில் வளாகத்திற்குச் சென்று அம்பேத்கரின் சர்வதேச நினைவகத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.